௨
-
சிவமயம்
அருளிப்பாடு நல்கும் அன்னைஸ்ரீசிவகாமசுந்தரிஅம்மை உடனுறை ஐயன்ஸ்ரீஅழியாபதி ஈசனின் பொருள்சேர்புகழைவிளக்கும்
குறுந்தகடு மற்றும் தலவரலாறு
வெளியீட்டு அருளிப்பாடுமிக்க பெருவிழா
ஓர் அருட்பார்வை
திருவருள் கொழிக்கும் விழா அரங்கத்தில்,நம்மைப் பேணுகின்ற அம்மை அப்பரை எழுந்தருளப்பண்ணிய அருட்காட்சி
விழாவைச்சிறப்பித்தது.
தெய்வீகம் தாண்டவமாடியது. விழா தொடக்கத்தில் ஒதுவாமூர்த்திகளின்
திருமுறை சிவத்தை வரவழைத்தது. ஆனந்தநடனம் அரங்கத்தை சிறப்பித்தது. எம்பெருமான் திருநாமம் எங்கும் ஒலித்தது.
சிவ வாத்தியங்கள் முழங்க ,திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்நிதானம் அவர்களை பூரணகும்ப
மரியாதையோடு வரவேற்ற முறை சைவமரபின் உச்சத்தைப்புலப்படுத்தியது.அன்பும்
பண்புமிக்க அடியார்குழுவினரும்,பெருமக்களும் குருவருள்பெற்று மகிழ்ந்தனர்.
பண்சுமந்தபாடலின் வடிவமாக விளங்கிடும் ஸ்ரீ
அழியாபதி ஈசர் உடனுறை ஸ்ரீ சிவகாமசுந்தரிஅம்மையை பேணிப்புரந்தருளும் ஸ்ரீஅண்ணாமலையார்
பக்தர்கள் குழுவின் அருஞ்செயலுக்கு ஆட்பட்ட குறுந்தகடும் மற்றும் தலவரலாறும் கொண்ட
நூல்களையும் ஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்நிதானமவர்கள் வெளியிட்டருள,அதனை பத்திமை கொண்டமருத்துவர்திரு
சிவராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.பேரன்பும்,பத்திமையும் கொண்ட
மருத்துவப்பெருமக்கள் வாழ்த்துரை வழங்கி குருவருளும், திருவருளும்
பெற்றார்கள்.நிறைவாகஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்நிதானம் அவர்கள் ஆசியுரை நல்க விழா இனிது நிறைவுற்றது.
திருவருளே குறிக்கோளாகக் கொண்ட ஸ்ரீஅண்ணாமலையார்
பக்தர்கள் குழு அருளாளர் எனது அன்பிற்கினிய அன்பர் அவர்கள் அவரது இதயமாக
திகழ்கின்ற அடியவர் படையினரில் குறிப்பாக,அவரது திருக்கரங்களாகத்திகழ்கின்ற
இருபேரன்புமிக்க அன்பர்கள் சிவப்பணிகளை சொல்ல வார்த்தைகளைத்தேடினாலும் கிடைக்காது
அவர்கள் சொல்ல ஒண்ணாத ''அரும்பணி செல்வர்கள்''-'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற
அப்பர் பெருமான் வாக்கு இவர்களை பார்த்து அடையாளம் காணலாம்,அடியவர்களை
ஒருங்கிணைத்து வரவேற்றுப்போற்றி உபசரித்த அருஞ்செயல் பாராட்டிற்குரியது.'' தொண்டு
செய்வார் அவர்துயரிலரே'' என்ற சம்பந்தர் திருவாக்கு ஸ்ரீஅண்ணாமலையார் பக்தர்கள்
குழுவிற்குப்பொருத்தமாகும்.இவ்அடியவர்படை அனைவருக்கும் ஸ்ரீ
அழியாபதி ஈசர் உடனுறை ஸ்ரீ சிவகாமசுந்தரிஅம்மையின் பேரருள் முற்றுமாக
அவர்களுக்குக்கிட்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்று சொல்லாமலேயே
பெறப்படும் என்பது திண்ணமாகும்
அடியவன்
அ ஞானஸ்கந்தன்
No comments:
Post a Comment